maragatham புவனேஸ்வரி ராமநாதன்
அவர்கள் எட்டு கேள்விகளுடனான இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த எட்டு கேள்விகளும் அவற்றிற்கான விடைகள் இதோ:
ஆங்கிலம் மற்றும் தமிழில் தந்துள்ளேன்.
இயற்கை உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா? இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?
இல்லை. அமெரிக்காவில் இயற்கை உணவு (organic food ) என்பது ஒரு ஆடம்பர பொருளாக, status symbol ஆக உள்ளது. நடுத்தர மக்கள் குழந்தைகளுக்காகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரையாலோ மட்டுமே இதை வாங்குகின்றனர். இயற்கை உணவு மட்டுமே உண்பதால் திடீரென வேறு உணவு உண்ணும் நிலை வந்தால் அதை நம் உடலால் தாங்க முடியாது. உலகில் பல பேர் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவிக்கும் பொழுது , எனக்கு இது போன்ற ஆடம்பர உணவில் ஆர்வம் இல்லை. இந்த பணத்தை வேறு நல்ல செயல்களுக்கு உபயோகிப்பேன்..
(இயற்கை உணவு என்பது இந்தியாவை பொறுத்த வரை சில ஆண்டுகள் முன்பு வரை சுலபமாக அனைவருக்கும் கிடைத்தது. ஏன் என்றால் நாம் ரசாயன உரங்களை பசுமை புரட்சிக்கு பின்பே உபயோகிக்க துவங்கினோம் . இன்னமும் கிராமங்களில் இயற்கை முறையில் விளைந்த காய்கனிகள் ஒவ்வொரு வீட்டிலும் விளைகின்றன. ஆனால் அமெரிக்காவில் பல விதைகள் / செடிகள் ரசாயன மற்றும் மரபியல் வேறுபாடு செய்யப்பட்டே விளைகின்றன . வரி, patent ரைட், விளம்பரம் என பல காரணங்களால் இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் மிகவும் விலை அதிகமாக உள்ளன. நாம் தரும் கொள்ளை விலை விவசாயிக்கு போவதில்லை, இடை தரகர்களே பயனடைகிறார்கள் ).
ஆனால் இயற்கை முறை விவசாயம் மட்டுமே அனைவரும் செய்து, அந்த organic உணவும் அனைவரும் வாங்கும் விலையில் இருந்தால் , நானும் மகிழ்ச்சியாக அதை உண்பேன். ஏன் எனில் இயற்கை விவசாயம் பூமிக்கு நன்மை தரும்:)
அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?
பகலில் சரியாக நேரத்தில் சாப்பிடுவேன். ஆனால் இரவில் என் கணவர் வந்த பின் அவருடன் சேர்ந்து சாப்பிட ஆசைபடுவேன். கணிபொறியாளர்களின் வித்தியாசமான வேலை பழக்கத்தால் என் இரவு உணவும் ஒரே நேரத்தில் அமையாது.
வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?
(அல்லது )
உங்களின் சமையலுக்கு வழிகாட்டி யார்?
என் அம்மாவே என் சமையல் குரு. அம்மா சமையல் கலை மட்டுமின்றி , மிகவும் குடும்பபாங்கான பாசமான பெண்மணி. அவர்கள் ஒரு புது உணவை சாப்பிட நேர்ந்தால் , அதன் செய்முறையை அதன் சுவையை கொண்டே சொல்லி விடுவார்கள். எனக்கு அவ்வளவு திறமை கிடையாது. ஆனாலும் அம்மாவின் திறமைகளை காப்பி அடிப்பேன் சில நேரம :) ஆனால் தன பாரமபரியமான சமையல் குறிப்புகளை எப்போதும் மாற்றாமல் செய்வார்கள். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். இது இந்த கால கட்டத்துக்கு சிரமம் என்றாலும் அம்மாவை போல் சமைக்கவே எனக்கு ஆசை.
புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
சரியாக வரவில்லை எனில் மிகவும் அமைதியாகி விடுவேன். கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்து பின் வந்து அதை சரி செய்ய பார்ப்பேன். அப்போதும் சரி வரா விட்டால், பின் அதை உருமாற்றி சாப்பிடும் பொருளாக மாற்றி விடுவேன்:) ஒரு பொழுதும் சாப்பிடும் பொருளை வீணாக்க மாட்டேன்.
உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?
*மது வகைகள்.
*பன்றி, மாடு மற்றும் எனக்கு பழக்கம் இல்லாத அசைவங்கள்.
*அஜினோமோட்டோ , .
தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?
இந்திய உணவு தயாரிக்க 'சில' பொருட்கள் போதாது. 'பல ' தேவை. அவற்றுள் 'சில' இங்கே:)
*அரிசி, உப்பு, கோதுமை, பருப்பு வகைகள், முட்டை .
*மஞ்சள், பூண்டு, தேங்காய் எண்ணெய், இஞ்சி, மிளகு, மிளகாய் , நல்லெண்ணை , பெருங்காயம், புளி, சர்க்கரை , பால் .
*கறிவேப்பிலை, புதினா, மல்லி இலை, வெங்காயம், தக்காளி.
*விடுமுறை நாட்களில் : மீன், கோழி.
இவை எப்போதும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்:)
குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?
எங்கள் வீட்டில் நானும் என் கணவரும் மட்டுமே. அதனால் நான் இரவு உணவையாவது என் கணவருடன் சேர்ந்து உண்ண ஆசை படுவேன். விடுமுறை நாட்களிலும் இதை நாங்கள் ரொம்ப ஆர்வமாய் செய்வோம். சேர்ந்து உண்பது மிகவும் மன மகிழ்ச்சி தரும். அப்படி செய்வதால் ஒருவர் மற்றவரின் விருப்பங்கள், உணர்வுகளை புரிந்து கொள்ளலாம்.
உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?
எனக்கு பிடித்த உணவை கேட்டு வாங்கி சாப்பிடுவேன், பிடிக்காததை நாசுக்காய் தவிர்ப்பேன்.
ஒரு வேளை உணவு கெட்டு போய் இருந்தால், என்னுடன் இருப்பவர்க்கு , செய்கை மூலம் அதை தொட வேண்டாம் என்று தெரிவிப்பேன்.
----------------------
Now in English:
1. What is your take on organic food , is it a big deal for you ?
No. Organic food is not a big deal for me. Generally organic foods are tasty but much expensive in USA and only the people with need go near that aisle in the departmental stores. My personal opinion on organic food is of two fold. I won't recommend expensive organic food unless otherwise stated by a physician. If used to it, we may end up allergic to the normal food in course of time. Moreover I can't appreciate pampering myself with such luxuries, when many out there really struggle for one meal a day. So I would rather donate that excess money to the needy, if I am that rich.
But as a woman hailing from a typical agricultural hometown, I know the benefits of organic farming. Organic farming is the only way to keep the soil fertile and it is not expensive to grow the vegetables with natural manure, (though the yield will be less in the beginning), but the price is more because of the middlemen. So if everyone practices organic farming , a fair trading and if that kind of food is affordable for every person, then I will also buy it.
2. Do you time your breakfast,lunch & dinner or eat when you are hungry ?
My breakfast and lunch will be regular. But I wait for my hubby to come home , so that we can have dinner together. (So the dinner time will depend on his work schedule).
3.Who inspired you to cook or bake?
My mom is my inspiration. She was not only an expert cook but also a very graceful lady. One of her secrets in cooking is finding out the recipe while tasting a new food and make it at home. Though I am not talented like her I would like to follow her ideas:) But she would not alter the authentic recipes she got through generations. It is very difficult nowadays but I too wish to do the same:)
4. You try a new recipe and it does not turn out good,what will you do ?
The first reaction will be a BIG silence, then I put off the stove and take rest for some time. Then I will transform it to something edible but will never waste food.
5. Name three ingredients you consciously avoid or eliminate even when the recipe calls for it ?
Alcoholic beverages
pork, beef, any non veg that is not appetizing for me.
ajinomotto.
6. Name few things you have to use in most recipes ?
Well, Indian gourmet food needs a big list. I prefer to stock up my pantry / fridge with the following always:)
Rice, salt, wheat flour, lentils, egg.
Turmeric, garlic, coconut oil, ginger, black pepper,chillies, sesame oil, asafoetida, sugar, milk, tamarind.
curry leaf, cilantro, mint, onion, tomato, potato.
During weekends: Fish, chicken.
7. How important is eating meals together as a family to you?
Very important . We are just two people in my house, hubby and myself. I love to have food with my husband. We eagerly wait for dinner and weekend meals to sit together and eat while sharing our whole day experience.
In general, by dining together we get to know each other well. We can understand the taste and preferences of our family. So it is a must for every house.
8.You do not like a particular dish at your favorite restaurant,what will you do ?
If it is not spoiled, I will silently order a different dish and finish off. If it is spoiled, I will signal those who are with me:). Mostly I will appreciate the dishes I like and never comment on those I don't.
---------------------------------------------------------------------
Here are some other questions. You can have a choice too.
The second set of questions:
1)Are you a vegetarian, or have you thought about being one?
2) who inspired you to blog?
3) How do you celebrate Christmas?...or a favorite holiday of your choice?
4)Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family, or prefer to ring in the New Year quietly, and privately, at home?
5)If someone were to ask you to bring dessert to a party, what would you bring? Store bought, or homemade, and if you were to make homemade, what would you make?
6) How will you celebrate your next birthday?
7)Do you have a New Year's resolution-and will you be sticking to it?
--------------------------------------------------------------------------
I am passing the questions to some of my friends. Please keep the game going:)
Cham
Jaleela
Asha
shama
Thanks!